பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை கோட்ட அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சார்நிலை பணியமைப்பு விதி 35 (a) புறந்தள்ளிடும் போக்கை கைவிட்டு விதிகளை பின்பற்றி முதுநிலை பட்டியலை வெளியிட்டு பதவி வாய்ப்புகள் வழங்கிட வேண்டும். பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

மேலும், விதிமுறைக்கு புறம்பாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உயரதிகாரிகளின் வீட்டு பணி மற்றும் மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கதினர் 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட பணியாளர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி கூறும்போது, கோரிக்கைகள் குறித்து பலமுறை தமிழக முதலமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், முதன்மை இயக்குநர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட பலரிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தவர். 

தங்களை அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாநிலக் குழுவிடம் ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...