குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தபடுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி இந்திரா நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை கடலைகார சந்து 72 வார்டு இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 40கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் தாங்கள்  இந்திரா நகர் பகுதியில் ரயில்வே சந்திப்பின் பின்புறம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு சிட்டா,பீமா ரசீது,மின் இணைப்பு  என அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களாக ரயில்வே நிர்வாகம் விரிவாக்கத்திற்காக  காலி செய்ய நிர்பந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறியவர்கள் இங்கு வசிப்பவர்கள் தாங்கள் சாதாரண தினகூலி மற்றும் நடைபாதை வியாபாரிகள் எனவும் உடனடியாக காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்திப்பதால் தங்களால் மாற்று வீட்டிற்கு முன்தொகை வழங்கமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...