கோவையில் விவசாய தோட்டத்தில் யானைகள் நுழைந்ததால் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதம்.


கோவை அருகே விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் நுழைந்து சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துச்சாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் நுழைந்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள், 30 பாக்கு மரங்கள், மிளகாய் செடி மற்றும் மின்வேலி, சொட்டு நீர் பாசன குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளது. 

இதைத்தொடரந்து, யானைகளை விவசாயிகள் சேர்ந்து விரட்டியதை அடுத்து, பக்கத்தில் இருந்த தோட்டங்களுக்குள் சென்றும் யானைகள் சேதங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அன்றாடம் யானைகள் தொல்லை இருந்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், யானைகளை விரட்ட வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் யாரும் வரவில்லை எனவும் விவசாயி முத்துச்சாமி புகார் தெரிவித்தார். 

மேலும், தனது தோட்டத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் அளவிற்கு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி இருப்பதாக கூறிய அவர், யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், பயிர்களை பாதுகாக்க விடிய, விடிய யானைகளை விரட்ட வேண்டிய நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். 20-க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் தோட்டங்களை சேதப்படுத்தி இருப்பது, அக்கிராம மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...