தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டமைப்பு மக்கள் நலக்கூட்டணியாக மாறியதே தவிர இது ஒரு நிரந்தர அமைப்பு இல்லை என திருமாவளவன் தகவல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூடலூரில் நடைபெற உள்ள பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில்,

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிவித்ததின் மூலம் கருப்பு பணம் இரட்டிப்பாக மாறி உள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள மாநாட்டில் ஒருமித்த கருத்து உள்ள இடத்து சாரி கட்சி தலைவர்கள் பங்கேற்பதாகவும், பணவிவகாரம் தொடர்பாக பிரதமரின் கருத்தை ஆதரிக்கும் மதிமுக பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக வைகோவிடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும் இது மக்கள் நலக் கூட்டணியில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். மக்கள் நலக் கூட்டமைப்பு நிரந்தமில்லை என டி.கே.ரங்கராஜன் தெரிவித்த கருத்தை ஆமோதித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து போராட மக்கள் நலக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டதாகவும், தேர்தலுக்காக அது மக்கள் நலக் கூட்டணியாக மாறியதே தவிர இது நிரந்தர கூட்டமைப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், மக்களின் பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்று கூடுவோம் எனவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிகட்டு தொடர்பாக திமுகவின் அனைத்து கட்சி போராட்டம் தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளது குறித்து தனக்கு தகவல் வரவில்லை எனவும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நீதிமன்ற நடவடிக்கையும் தாண்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

பொது சிவில் ஷரியத் சட்டம் இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. பாஜக அரசு வேண்டும் என்றே இந்த செயல்களில் ஈடுபடுகிறது. இதனை எதிர்க்கும் வகையில் கூடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...