'சட்டம் சாதகமாக இல்லாதபோது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதை தவிர வேறு வழியில்லை' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம் சாதகமாக இல்லாதபோது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதை தவிர வேறு வழியில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் கார்மேகத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்  பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர்,விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜல்லிகட்டு விவகாரத்தில் பா.ஜ.கவை சேர்ந்த தமிழ்நாட்டு தலைவர்கள் கருத்தும் மத்திய தலைமையின் கருத்தும் வெவ்வேறு  மாதிரியாக இருப்பதாக குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ஒரு மாதிரியாகவும் ஜல்லி கட்டு விவகாரத்தில் ஒரு மாதிரியாகவும் சட்ட நுணுக்கங்களை மத்திய அரசு கையாள்வதாக குற்றம்சாட்டிய சீமான், சட்டம் சாதகமாக இல்லாத போது தடையை மீறி ஜல்லிகட்டு போட்டியை நடத்துவதை தவிர வேறுவழியில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பியும் பதில் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அ.தி.மு.க பொது செயலாளராக சசிகலா வருவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் எனவும் கூறியதுடன் புதுச்சேரி முதல்வர் தேர்வு செய்யப்பட்டதை போல தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதில் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது 2021 தேர்தலில் தான் தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் பழைய 500 ,1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாக பொது மக்கள் கடும் அவதிபடுவதாகவும, 2000 ரூபாய் நோட்டின் அவசியம் இப்போது எதற்கு எனவும் 2000 நோட்டில் சமஸ்கிருதத்தையும் காவி கொடியையும் சேர்த்ததை தவிர வேறு எதுவும் இல்லை எனவும் சீமான்  தெரிவித்தார். 

வர்தா புயல் பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை மீட்பு பணிகளுக்கு கொண்டு வர வேண்டும் அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் தமிழக அரசின் உள்கட்டமைப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...