அரசு நிலத்தை அ.தி.மு.க பொருளாளர் ஆக்கிரமிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை அருகே 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அ.தி.மு.க பொருளாளர் ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 6.50 ஏக்கர் பரப்பளவில் மழையூர் மேட்டுக் குட்டை உள்ளது. தண்ணீர் தேக்கி வைப்பதற்காக இந்த குட்டையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டையில் 2.50 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி சைட் பிரிக்கும் முயற்சியில் 61-வது வார்டு அ.தி.மு.க பொருளாளர் ஆறுமுகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு அ.தி.மு.க நிர்வாகியை முற்றுகையிட்டதையடுத்து சைட் பிரிக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து புகார் அளிக்க தி.மு.க மாவட்ட பிரதிநிதி பட்டணம் செல்வகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், குட்டையில் கரைகளை உடைக்கும் பணியில் பொக்கலைன் இயந்திரத்துடன் ஆறுமுகம் மற்றும் அவரது உதவியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் எனவும் அதை ஆக்கிரமிக்க ஆறுமுகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், அப்பாவி பொதுமக்கள் 191 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு பட்டா பெற்றுத் தர முயற்சிப்பதாகவும், உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பட்டணம் செல்வகுமார் கேட்டுக் கொண்டார். அரசு கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் அ.தி.மு.க நிர்வாகி ஆறுமுகம் மற்றும் அவருக்கு உதவிய உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...