சாட்டிலைட் டிஷ் மூலம் தமிழகம் முழுவதும் ஈஷா யோகா வகுப்பின் ஆனந்த அலை நேரடி ஒளிபரப்பு

சத்குருவால் நேரடியாக தமிழில் நடத்தப்படும் ஈஷா யோகா 2-நாள் வகுப்பு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. முதல் முறையாக சாட்டிலைட் டிஷ் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள 63 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

மேலும், இவ்வகுப்புகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 21 ஆயிரத்து 786 பேர் பங்கேற்றனர். சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு சத்குரு எடுக்கின்ற நேரடி தமிழ் வகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் முழுவதும் நேரலை வகுப்பு

சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், முக்கிய இடங்களில் இவ்வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் பங்கேற்பாளர்களுக்கு துணை இருந்தனர். இவ்வகுப்பிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் மூலம் மதிய உணவு பரிமாறப்பட்டது. 



ஈரோடு, தர்மபுரி, சேலம், கோபி, ஓசூர், காங்கேயம், கிருஷ்ணகிரி, பெருந்துறை, திருப்பூர், வெள்ளக்கோவில் உட்பட தமிழகத்தின் மேற்கு மாவட்ட நகரங்களில் நடைபெற்ற யோக வகுப்புகளில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற வகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்





இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:-

நான் வழங்கும் இந்த யோக வகுப்பில் தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களின் உயிர்துடிப்பிற்கு தலைவணங்குகிறேன். சில தலைமுறைகளுக்கு முன் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஆன்மீகசாதனை இருந்தது. அதனை மீண்டும் உருவாக்குவதற்கான நேரமிது. 

36 வருடங்களுக்கு முன் துவங்கிய இந்த தன்னை உணர்தலுக்கான அமைதிப்புரட்சி இனியும் அமைதியாய் இல்லை, கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. பல பேரின் உயிர்களை, இத்தனை சக்தியாய் தொடுவதற்கான ஒரு வாய்ப்பு பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இதனை நாம் நிகழச் செய்வோம்" என்றார்.

ஈஷா யோகா சார்பில் சென்னை 10 ஆயிரம் மரக்கன்றுகள்:-

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வகுப்புகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் இலவசமாக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை நட்டு, பாதுகாத்து வளர்க்க அனைவரும் உறுதி எடுத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...