மலையில் மண்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயி‌ல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குன்னூர்- உதகை வரையில் தொடர்ந்து ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்க்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உதகை, நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்க்கு செல்லக் கூடிய மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகளும் ரயில் பாதையில் விழுந்துள்ளதால் அதனை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், குன்னூரில் இருந்து உதகை வரையிலான ரயில் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...