ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து கருத்தரங்கம்


தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை ஒருநாள் கருத்தரங்கம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் தொழில்நுட்ப பிரிவும், தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் இணைந்து நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், தென்மண்டல பேரிடர் மேலாண்மை வாரியத்தின் பயிற்சி அதிகாரி ஜி.ஆறுமுகம் பங்கேற்று பேரிடர், தற்காப்பு, மறுவாழ்வு குறித்தும், சுனாமி, வெள்ளப்பெருக்கு, தீவிபத்து உள்ளிட்ட காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ''பூமியின் சுழற்சியிலும், கால மாற்றத்தினாலும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. மனித வாழ்வின் அத்தனை அம்சங்களையும் பாதிக்கும் இதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இந்த பேரிடர்களை எதிர்கொள்ள நம்மை தயார்செய்துகொள்ள முடியும்.



இந்திய அரசு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான குழுக்களை அமைத்துள்ளது. மேலும், இந்தக் குழு மக்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளையும் வழங்கும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, பேரிடர் காலங்களில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளும், செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், சிவில் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஐ.பத்மநாபன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...