சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுரை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டுமென சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், காவல் துறையினர் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் கொலை நடந்த நாளான்று பதிவான சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் சசிகுமாரின் செல்போன் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் உத்தேச வரைபடங்கள் வெளியிட்ட போதும், எந்தவித துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி காவல் துறையினர் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் சசிகுமார் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை பொது ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசணை மேற்கொண்டார். 

அப்போது இதுவரை வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கிடைத்துள்ள தடயங்கள், வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழக்கை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கிய அவர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...