மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டம்


மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 9 கிராமங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தை நேஷனல் ருர்பன் மிஷன் (NRUM) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் 9 கிராம ஊராட்சிகளையும் நகர பகுதிகளுக்கு இணையாக உயர்த்திடும் வகையில் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

இத்திட்டம் செயல்படுத்த கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் திட்ட இயக்குநரை துணை தலைவராகவும் பல்துறை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டும் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நேஷனல் ருர்பன் மிஷன் கூட்டத்தில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் அவற்றின் நன்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பின்னர் பணிகள் மேற்கொள்ள ரூ.30 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளையும் வளர்ச்சியடைந்த நகர பகுதிகளுக்கு இணையான முன்னேற்றமடைந்த பகுதிகளாக மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...