பாரதியார் பல்கலை சார்பில் தென் மண்டல பல்கலைக் கழகங்களிடையிலான மகளிர் கபடி போட்டி துவக்கம்


பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித் துறை 2016-ஆம் கல்வி ஆண்டின் தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மகளிர் கபடி போட்டியை நடத்துகிறது. இதில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 54 பல்கலைக கழகங்கள் பங்கேற்கவுள்ளன.



டிசம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிக்கான துவக்கவிழா புதனன்று பாரதியார் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், பேராசிரியர் முனைவர் ஏ.கணபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி பேசியதோடு பல்வேறு பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏறறுக்கொண்டார்.



இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் முன்னாள் இந்திய கபடி வீரர் அர்ஜூனா விருதுபெற்ற பி.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.

உடற்கல்வித் துறை தலைவர் மற்றும் இந்த போட்டியின் அமைப்புச் செயலருமான முனைவர் கே.முருகவேல் வரவேற்றுப் பேசினார். இணை செயலாளர் முனைவர் ஜி.குமரேசன் மற்றும் முனைவர் பி.முருகேஷ்வரி ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கான மகளிர் கபடிப்போட்டிகள் பல்கலைக் கழக விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...