கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பணமில்லா பரிவர்த்தனை கருவிகள் அறிமுகம்


ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பினை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக முன்பதிவு மையத்தில் 3 புதிய கருவிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ரயில்நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதில் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு பெறும் மையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக புதிய கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கடன் அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதற்காக ஒரு இயந்திரம் செயல்பட்டு வந்த சூழலில் தற்போது மேலும் இரண்டு கருவிகள் மூலம் ரயில்வே நிர்வாகம் சேவையை துவங்கியுள்ளது.

இதனால் சில்லரைக்காக ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்பதால் அதனை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறுவதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் சாதாரண பயண சீட்டு வழங்குமிடத்திலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் மூத்த குடிமகன்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது கோவை ரயில்நிலையத்தில் முன்பதிவு மையத்தில் உள்ள 10 கவுண்டர்களில் 4 மட்டுமே இயங்கி வருவதும் சாதாரண பயணச்சீட்டு வழங்குமிடத்தில் 3 கவுண்டர்கள் மட்டுமே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...