கோவையில் வசிக்கும் ஜெயலலிதாவின் பள்ளி தோழி பகிரும் நினைவுகள்!


மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பள்ளியில் பயின்ற தோழி  கோவையில் உள்ளார். அவர் தனது பழைய நினைவுகளை கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த முன்னாள் நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம் அவர்களின் மூத்த மகள் அனுராதா. தற்போது 70 வயதாகும் அனுராதா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று கோவை இடிகரையில் வசித்து வருகிறார். 



இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான பள்ளி வாழ்க்கை குறித்து  கூறியதாவது :- 

'நாங்கள் பிரசண்டேசன் கான்வெண்ட் சர்ச் பார்க் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நல்ல குணம் படைத்தவர் ஜெயலலிதா. படிப்பிலும் அப்படித்தான்.பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில்  அவருடன்  சேர்ந்து நடனம் ஆடியுள்ளேன். எப்போதும் சைவ உணவு வகைகளையே உண்ணும் பழக்கம் உள்ளவர் அவர். 

10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அவர் பி.யூ.சி படிப்புக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவரால் படிப்பை தொடரமுடியவில்லை. அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த போது நான் என் குடும்பத்தோடு சென்று படங்களை பார்ப்பேன். 

பள்ளியில் என்னுடன் எப்படி பேசி பழகினாரோ படங்களிலும் அவ்வாறே தெரிந்தார். அவரது நடிப்புத்திறமையை பார்த்து வியந்து போவேன். ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும் மிகவும் உடைந்து போனேன், ஈடுகட்ட முடியாத இழப்பு!'

 

ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் தனது சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் நம் 'அம்மா'வின் தோழி, அனுராதா.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...