அகில இந்திய அளவிலான என்சிசி முகாம் ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லூரியில் துவக்கம்


2016-17ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான என்சிசி பயிற்சி முகாம், கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. 



அட்வான்ஸ் லீடர்சிப் கேம்ப்- 17 என்னும் இந்த முகாமில் பல்வேறு என்சிசி பிரிவு இயக்குநகரத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட 2016-17ம் ஆண்டிற்கான இம்முகாமை கோவை குரூப் கமேண்டர் கர்னல் எம்.பி.செலஸ்டின் சேனா மெடல் மற்றும் இம்முகாமின் தலைமை அதிகாரி தொடக்கி வைத்தார்.

இம்முகாமில், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர ஆணையர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோர் என்சிசி மாணவர்களுக்கான தலைமை பண்புகளையும், ராணுவத்தில் முப்படைகளில் சேர்வதற்கான பயிற்சி மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவற்றின் நடைமுறை பயிற்சி, நேர்காணலுக்கு தயார்படுத்துவது குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

மேலும், தனி நபர் மேலாண்மை குறித்த வகுப்பும், அதுகுறித்த பயிற்சி பட்டறையும் வெளிமாநில என்சிசி மாணவர்கள் பார்வையிடுவதற்கும், இம்முகாமின் பயிற்சி அதிகாரி மேஜர் தேசிங் மற்றும் மேஜர் ரூபா ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...