மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 இலவச அழைப்பு, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !


கன மழை காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 31 இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியபட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஹரிஹரன்,வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் 31 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை,மீட்பு  மற்றும் தேடுதல் பணி ஆகியவற்றுக்காக 4 வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 31 இடங்களிலும் நிவாரண முகாம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்,கோவை மாவட்ட நிர்வாகம் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...