ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 



 அதில், 2016ம் ஆண்டில் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை அமைத்தல், வல்லுநர் குழு அறிக்கையை  உடனடியாக வெளியிடுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்தல், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வூதியம் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களித்து திட்டத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதில், கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...