கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தலைமையில் இன்று (29.11.2016) துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில்:-  “கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று (29.11.2016) கோவை மாநகராட்சியும் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் இணைந்து மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ முகாம் துவக்கி வைத்ததை துப்புரவு பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேசி இந்த மருத்துவ முகாமிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.

இந்த மருத்துவ முகாமை கோவையிலுள்ள முன்னனி தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக இணைந்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை “YI” மற்றும் “CII” மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். 

அதனை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மண்டல வாரியாக உள்ள பள்ளிகளில் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க துப்புரவு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இந்த தகவலை துப்புரவு பணியாளர்கள் சங்கங்கள் மூலம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து துப்பரவு பணியாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்ற இம்மாநகராட்சி நற்பெயர் ஏற்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர்  டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், அனைத்து உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், முன்னனி மருத்துவமனைகளான  பி.எஸ்.ஜி, கே.எம்.சி.எச், கே.ஜி, கங்கா, அரவிந்த் கண்மருத்துவமனை, சங்கரா கண்மருத்துவமனை, ராமகிருஷ்ணா, தைரோ கேர், ஜி.கே.என்.எம்,  ஜெம் மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களான  ரத்னா ஏஜென்சீஸ், ஐடிசி  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...