கோவை மாநகரில் விபத்துகளை குறைக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிவித்துள்ள போக்குவரத்துத் துறை


கோவை மாநகரில் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை, வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாத வகையில் இருப்பதாக காவல் துணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதனை சீரமைத்து வண்ணம் பூசவும், பிரதிபலிப்பான் பொறுத்தவும் காவல் துணை ஆணையர் சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து உடனடியாக, அந்த வேகத் தடைக்கு வண்ணம் பூசப்பட்டு, பிரதிபலிப்பான் பொறுத்தப்பட்டது.

இதனிடையே, சாலையில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை காவல் துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தும் வகையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 8190000100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தங்களது சாலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகளை தெரியப்படுத்தினால் உடனடியாக சாலை சீரமைக்க நடவடிக்கை மெற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...