பிரபாகரன் சுவரொட்டியை அச்சடித்தால் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டியதாக புகார்

மறைந்த தமிழீழ விடுதலை போராட்டத்த்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்கான சுவரொட்டியை அச்சடித்தாலும், ஒட்டினாலும் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டுவதாக தமிழர் விடியல் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். 

இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டதாவது :- 

பிரபாகரனின் உருவப்படத்தை அச்சடிக்க கோவையில் தான் அதிக கெடுபிடி நிலவுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படிருந்தாலும் அதன் தலைவர்கள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போலீசார் அச்ச்கங்களில் புகுந்து மிரட்டுவது அடக்குமுறையை காட்டுகிறது. எனவே, மற்ற மாவட்டங்களை போல எங்களுக்கும் பிரபாகரனின் உருவம் பதித்த சுவரொட்டியை அச்சடிக்கவும், சுவரில் ஒட்டவும்  அனுமதி அளிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...