நேரு குழுமங்களின் சார்பாக நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் துவக்க விழா


கோவையில் நேரு குழுமங்களின் சார்பாக புதனன்று (இன்று) நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் துவக்க விழா ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதனை நேரு குழுமத்தின் செயலாளர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் துவங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்; நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் தற்போது பணிபுரியும் மேலாளர்களுக்கு புத்துணர்வும், அவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் இம்மையம் உதவும். மேலும் இம்மையம் இளைய தலைமுறைகளுக்கு மேலாளர்கள் திறமைகளை பெருக்கி, துல்லியமாய் தொலைநோக்கு பார்வைகளோடு செயல்பட மேடை அமைத்து தருகிறது. 

இந்த மையம் சரியான மனப்பாங்கையும், எல்லையற்ற நம்பிக்கையும் தான் நிறுவனங்களில் வெற்றிக்கு வழிவகுக்கிறது. இவை இல்லையென்றால், சர்வதேச நிறுவனங்களில் போட்டியிடையில் நிறுவனம் வளர்வதும், தொடர்வதும் கனவாய் போய்விடுகிறது. இதனை உலகளவில் சிறந்த நிறுவனங்களில் நிலைநிறுத்த அவசியமான அடிப்படையில் கவனம் செலுத்துகிறது எனக் கூறினார். 

 

ஒரு நாள் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. அனுதினம் கணக்கு பதிவு

2. நிதி ஒரு தொழில்

3. பயிற்சி மற்றும் மேம்பாடு

4. சமூக வலைதள சந்தையிடல்

5. சந்தை ஆராய்ச்சி

இரு நாள் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. பட்ஜெட் மற்றும் முன்கணிப்புகள்

2. இடர் மேலாண்மை

3. மேலண்ஸ் ஸ்கோர் கார்டு

4. சமூக ஊடக கருவிகளின் திறனறிதல்

ஒரு வாரம் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. மேலி அடிப்படை 9.94

2. பணி திறனாய்வு

3. நிறுவன கலந்தாய்வு முறைகள்

4. பைலட் ஆய்வு

புதுமுக மேலாளர் எனத்தொடங்கி அனுபவம் பெற்ற மேலாளர் வரை பயனுரும் வகையில் இந்த பயிற்சிகள் அமைந்துள்ளன.

இந்த விழாவில் பாரதியார் பல்கலைக் கழக முன்னாள் மேலாண்மை துறை இயக்குநர் இரா.வெங்கடபதி, நேரு கல்விக் குழும முதல்வர் எஸ்.பிரான்க்லின் ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...