மாணவர்கள் உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைபுரிய வேண்டும் ஆட்சித்தலைவர் அறிவுரை!

கோயம்புத்தூர் பி.எஸ.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் அரசு விடுதியில் தங்கி பயின்று வரும் பொதுத்தேர்வு  எழுதவுள்ள மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி முகாம் இன்று (19.11.2016) தமிழ்நாடு கதர்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சந்தோஷ்பாபு முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும், வழிகாட்டி புத்தகங்களையும் வழங்கினார்.



பின்னர் பேசிய அவர்; 
தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இதன்மூலம், தமிழகத்தில் கல்விப்புரட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவி மாணவியர்களின் கல்வியை மேம்படுத்தி உயர்நத சிகரங்களை அடைகின்ற உதவுகின்ற நிகழ்ச்சிதான் இந்த சிகரம் தொடு நிகழ்ச்சி. தேர்வை கொண்டு மாணவர்களுக்குள்ள பய உணர்வை நீக்கி, தன்னம்பிக்கையை வளர்க்க இந்நிகழ்ச்சி உதவுகிறது . இந்நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களாகிய நீங்கள் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், உயர்ந்த பதவிகளான இந்திய குடிமைப்பணிகளுக்கு எப்படி இப்போதிலிருந்து எவ்வாறு தயார் செய்வது, தேர்வுகாலங்களில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் இங்கே நம்மிடையே இருக்கும் சாதனையாளர்களால் உங்களுக்கு தெளிவாக விளக்கப்படவுள்ளது. 

மேலும் மாணவர்களாகிய நீங்கள் வாழக்கையில் உயர்ந்த லட்சியங்களை அடைய சந்தர்பத்திற்காக காத்திராமல், உங்களுக்கான லட்சியங்களை நீங்களே வகுத்து சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்திக் கொண்டாலே போதும் சாதனைகளை நிகழ்த்தி விடலாம். இன்றைய மாணவர்களே நளைய உலகை ஆளப்போகிறவர்கள். தினமும் என்ன படிக்க வேண்டும் என்று நிர்ணயித்து கொண்டு காலத்தை வீணாக்காமல் அனுதினமும் படித்தாலே போதும் அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு அரசின் சார்பில் பல்வேறு கல்வி ஊக்கத் தொகைகளும், விலையில்லா லேப்டாப் களும், வழிகாட்டி புத்தக்கங்கள், பள்ளிச் சீருடைகள்  வினாவங்கிகள், மிதிவண்டிகள் இன்னும் எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 



பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியர்களுக்கென உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களையும், இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி பொதுத்தேர்வில் அதிகளவு மதிப்பெண்களை பெற்று  திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப்பேசினார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கடந்த பொதுத்தேர்வில்  சாதனைபடைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், உயர்கல்வி தெளிவு விளக்க புத்தகங்கங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் ராமசாமி, வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், அண்ணா பல்கலைகழக முதல்வர் சரவணக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.டி.பிரியங்கா, சந்தோஷ் பல்கலைகழக பேராசிரியர் ஷர்மிளாஆனந்த், அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியர் கனகராஜ், மற்றும்  விடுதி மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...