ஏ.டி.எம் மையங்களில் காத்து நின்றோருக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கிய தி.மு.க.வினர்

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. ஆனால், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், பணம் வாங்குவதற்கும் முதியோர் மற்றும் பெண்கள் பல மணி நேரம் காத்து நிற்கின்றனர். நீண்ட நேரம் நிற்பதால் சிலர் மயக்கமடைகின்றனர்.



இந்த நிலையில் கோவை மாவட்ட திமுக இளைஞரனி சார்பில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு குடிநீர், டீ மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.



இது குறித்து தி.மு.க இளைஞரனியின் மாநில துணை செயலாளர் பாரி கூறியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை தி.மு.க. மனதார வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு, மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை அரசு இருப்பு வைத்துக்கொண்டு இந்த திட்டத்தை அமுல் படுத்தியிருந்தால், இத்தகைய பிரச்சனைகள் எழுந்திருக்காது. வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் நீண்ட நேரம் நிற்கும் மக்கள் பல இடையூறுகளை சந்திக்கின்றனர்.



இதை தொடர்ந்து, தளபதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் களைத்துப்போய் நிற்கும் மக்களுக்கு குடிநீர், டீ மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வழங்கினோம். இன்று மட்டும் சுமார் 1500 குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட உள்ளது. தொடர்ந்து திங்கட்கிழமை அன்று ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் சாய்பாபா காலனி பகுதியிலும் இவற்றை விநியோகிக்க உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் தி.மு.க. உறுப்பினர்களான பிரபுராம், சந்திரசேகர், சிராஜ்தீன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...