தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்களை வெளியிட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 58.4 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 16.14 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 495 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வால்பாறை சோலையாறு அணையின் முழு கொள்ளளவு 160 அடி ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 69.23 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 172 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...