விஜய் மல்லையாவுக்கு கடன் தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கியைப் பாராட்டி சமூக நீதிக்கட்சி நூதன போராட்டம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 63 பெருங்கோடீஸ்வர பண முதலைகளின் சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மக்களை வஞ்சித்து வரும் இந்நிலையில், பண முதலைகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயக் கடன், ஏழை மாணவர் கல்விக் கடன் என சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடனில் சிறிதும் சலுகையின்றி கடுமையான வசூலில் ஈடுபடும் வங்கிகள், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு வழங்கியுள்ள கடன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே கண்டனப் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சமூக நீதிக் கட்சியின் சார்பாக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்யை ஏமாற்றிய ஏழை விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடியைப் பாராட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரிடம் மலர் கொத்து வழங்கி நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சென்ற சமூக நீதிக் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களை கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...