கோவை மாநகராட்சியின் மூலம் இப்பகுதிகளுக்கு தீர்வு கிடைக்குமா?

வீணாய் போகும் குடிநீர்!

கோவை, ஹோப்ஸ் பகுதியையும், சிங்காநல்லுர் பகுதியையும் இணைக்கும் சாலையான காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்த சாலையோரங்களில் வீணாக குடிநீர் செல்கிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள் சாலையோரமாக செல்வதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகின்றனர். இதனை சரிசெய்ய கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மரம் அகற்றப்படவில்லை!

59வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் கடந்த தீபாவளி முன்பு பெய்த கன மழையால் அப்பகுதியில் சாலைஓரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. பின்னர், சாலையில் போக்குவரத்து நெரிசலை  தவிர்ப்பதற்கு  உடனடியாக மரத்தை அகற்றுவதற்காக மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. வெட்டப்பட்ட மரத்தை அப்பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் அதனை அகற்றப்படாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



கரடு முரடான சாலை!

சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான தேவேந்தர் வீதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 



அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி!

சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட தேவேந்தர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தொட்டி மூலம் உப்புத்தண்ணீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிக்கப்படாமல்  உள்ளதால் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...