குறைதீர் கூட்டத்தில் 140 ஓய்வூதியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்- ஆட்சியர் வழங்கினார்


ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பீட்டிலான பணப்பயன்களுக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, 140 ஓய்வூதியதார்களுக்கு ரூ.41 லட்சம் மதிப்பிலான பணப்பயன்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 44 மனுக்கள் பெறப்பட்டது. 30 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தலைமை அலுவலக ஓய்வூதியத் துறை இணை இயக்குநர் சி.ராமசந்திரன், துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஷேசாத்திரி, மாவட்ட கருவூல அலுவலர் (பொ) டி.சி.எல்.நடராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...