டாஸ்மாக் கடைகளில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மனு



தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியிருப்பதாவது:- ''கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் 24 மணி நேரமும் எவ்வித தடையுமின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு படிப்படியாக மது விற்பனையை குறைப்பது என்ற அறிவிப்பும் எவ்வித அவசரமும் இன்றி சாவகமாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது ஒருபுறமிருந்தாலும் சட்டத்தை சரிவர அமல்படுத்தி சட்டப்படி குறந்தபட்சம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.

தற்போது மது விற்பனைக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள கால அளவு கடைபிடிக்கப்படாததாலும், அரசு மது விற்பனையை நாளுக்கு நாள் உயர்த்த ஆர்வமிக்க திறமையான அதிகாரிகளைக்கொண்டு திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்து, நிர்ணயித்த அளவிற்கு மேலும் முறையற்று விற்பனை செய்வதாலும், அன்றாடம்  கூலி வேலை செய்து தங்களது வாழ்வை நடத்தும் ஏழை மக்களும், அவர்களது குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி மதுபானம் விற்பனை செய்யும் துறையில் அனுமதிக்கப்பட்ட காலநேரம் தவிர மற்ற நேரங்களில் மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில், 

''அதிமுக பதவிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், சில கடைகள் மூடப்பட்டன. மேலும், மதுவிற்பனைக் கடைகளில் நேரமும் குறைக்கப்பட்டன. ஆனால், தற்போது எந்த டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளிலும் நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை. இரவு, பகல் பார்க்காமல் கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெருகிறது. ஆளுங்கட்சியினரே பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை நிர்வகித்து வருவதால் சட்டங்களை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவணம் செலுத்தி மதுபான விற்பனை முறைகேட்டை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...