ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த இந்து மக்கள் கட்சி தலைவர் மீது வழக்கு

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தற்கு வரவேற்பு தெரிவித்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையிலான அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக  கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இதனிடையே, இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அர்ஜீன்சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...