தேசிய விருதுபெரும் பத்திரிகையாளர் செல்வகுமாருக்கு பாராட்டு விழா

சிறப்பான கட்டுரைகள் எழுதும் செய்தியாளர்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் ஆண்டு தோறும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தினமலர் கோவை பதிப்பின் முதன்மை நிருபர் செல்வகுமார் எழுதிய ‘ஒரு நதியைத் தேடி’ என்னும் தொடர் கட்டுரையைப் பாராட்டி வரும் 16ம் தேதியன்று தில்லியில் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.



இதற்காக தற்போது ஒட்டுமொத்த தமிழக ஊடகத்துறையும் செல்வகுமாரைக் கொண்டாடி வருகின்றது. அதன் ஒருபகுதியாக, கோவை பத்திரிகையாளர்கள் இணைந்து தேசிய விருதுபெற உள்ள செல்வகுமார்-க்கு, ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபம் ஒன்றில் பாராட்டு விழா நடத்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு செல்வகுமாரை வாழ்த்திப் பேசினர்.

இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் செல்வகுமார் பேசுகையில், ''காமராஜர் காலத்தில் தொழில்நுட்பம் அதிகமாக இல்லை, ஆனால் பரம்பிக்குளம் உள்ளிட்ட பல அணைகளை கட்டினார். இது மிகவும் பிரம்மிக்கத்தக்கது. இதை அடிப்படையாகக் கொண்டு நீர்பாசன முறையை மேம்படுத்த பல தொடர் கட்டுரைகளை எழுதினோம். மரக்கடத்தல், சூழல் குறித்த கட்டுரைகள் எழுதும் போது மிரட்டல்கள் வந்தன. அவற்றைக் கடந்து செய்திகள் வெளியிட்டோம். அதன் எதிரொளியாக பலர் கைது செய்யப்பட்டனர். இதை நான் தான் செய்யமுடியும் என்பது இல்லை. செய்தியாளர்கள் அனைவரும் செய்யமுடியும். நம்மால் முடியாது என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இந்த விருதுக்காக என்னை கவுரவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நான் உங்களோடு பயனிக்க வேண்டும்'' என அவர் பேசினார்.



இதனைத்தொடர்ந்து, இளம் பத்திரிகையாளர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...