மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடை- மக்கள் மகிழ்ச்சி


மத்திய அரசின் ''ஜன் அவுஷதி'' திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்துக் கடைகளினால் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மக்கள் அதிகம் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அத்யாவசிய முக்கிய மருந்துகளின் விலையில் கட்டுப்பாட்டினைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பகுதிகளில் ஜன் அவுஷதி மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 



இந்த மருந்துக் கடைகளில் சுமார் 400, 500 ரூபாய்க்கு தனியார் அல்லது வெளிக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் இந்த ஜன் அவுஷத் மருந்தகத்தில் வெறும் 40 முதல் 50 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 



இத்திட்டத்தின் கீழ் கோவை இராமநாதபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளர் கூறுகையில், ''தனியார் மருந்துக் கடைகளில் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இனி மக்களுக்கு இல்லை. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...