ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை: கோவை காவல்துறை தீவிர சோதனை! 

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் சிறை தண்டனை! கோவை காவல்துறை தீவிர சோதனை! 

கோவையில் தீபாவளி முன்னெச்சரிக்கை:

தீபாவளிக்கு இன்னும் 1 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவையில் முக்கிய பகுதியான கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நெரிசலில் திருடர்களை கண்டறிய முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள், துண்டு பி‌ரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டும் வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணத்தில் பட்டாசுக்கு  தடை: 

ஒவ்வொரு வருடமும்  தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகனங்களில் பட்டாசுப் பொருட்கள் கொண்டு செல்வதில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும். எனவே பயணிகள் பட்டாசு மற்றும் இதர தீபிடிக்கும் பொருள்களை எடுத்து செல்லாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும் என்று ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளது. 

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை:

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிக இருப்பதாலும், காவல்துறை பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பட்டாசுப் பொருட்கள் ரயிலில் கொண்டு செல்வதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் பயணிகளிடம் ரயில்வே காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. 

மேலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களிடம் செயின் பறிக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் பிக்பாக்கெட் கொள்ளையர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க சீருடை, சாதாரண உடையிலும் பயணிகளுடன் பயணிகளாய் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...