துப்புறவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்- தமிழ்புலிகள்


கோவை மாநகராட்சியில் பட்டதாரி இளைஞர்களை துப்புரவு பணி செய்ய ஆணை பிறப்பித்துள்ள நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களுக்கு உரிய வேலை வழங்கக் கோரியும் தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.மார்க்ஸ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியில் துப்புறவுப் பணி செய்து பணிக்காலத்தில் காலமான துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது. அந்த வாரிசுதாரர்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு துப்புறவுப் பணி மட்டுமேதான் வழங்கப்படுகிறது. இந்தச் செயல் துப்புறவுப் பணியாளர்களின் குழந்தைகள் என்னதான் படித்தாலும் அவர்கள் அருந்ததியராக பிறந்ததால் துப்புறவுப் பணிதான் செய்ய முடிவும் என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளது. 

இந்தச் செயல் குலக்கல்வித் திட்டத்தை கோவை மாநகராட்சி பின்பற்றி வருவதாகக் கருதுகிறோம். இந்நிலையை மாற்றி கருணை அடிப்படையில் துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளை பணியில் சேர்க்கும் போது அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும். 

மேலும், ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் துப்புறவுப் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த அலுவலக வேலையினை ஒதுக்கித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...