கோவை அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்


அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கோவை இராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து பணி மனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

கோவை இராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த 100 சி என்ற பேருந்து நேற்று காலை பீளமேடு சேரன்மாநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்து இடதுபுறமாக முந்திச்செல்ல முயன்ற போது பேருந்து ஓட்டுனருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஓட்டுனர் செல்வக்குமாரை சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுனர் செல்வக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகளை இயக்க மறுத்த தொழிலாளர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.ஓட்டுனரை தாக்குயவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏராளமானோரை அழைத்து வந்து பீளமேடு போக்குவரத்து பணிமனையில் வைத்து மீண்டும் மீண்டும் தாக்கியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர் .

இந்த போராட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.பணி மனை முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஓட்டுனர் செல்வக்குமாரை தாக்கிய திருமலைராஜன், சுப்பிரமணியம் என்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.இது குறித்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.காலை 4 மணி முதல் 7.30 வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம் காரணமாக சுங்கம் போக்குவரத்து பணிமனை முன்பாக பரபரப்பான சுழ்நிலை நிலவியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...