வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் தன்னலமற்ற சேவைபுரிந்த ​​​​ஊர்க்காவல் படை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதியின் மேற்பார்வையில், பெரியநாயக்கன்பாளையம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து 150 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.



மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்கவும் திட்டமிட்ட காவல் பணி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆலோசனைப்படி கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் 24.7.2017 மாலை முதல் 25.7.2017 மதியம் 2 மணி வரை சேவையாற்ற பணி ஒதுக்கப்பட்டது.



வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊர்க்காவல் படை நண்பர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சொந்த பணி முடித்து காவல் பணியாற்றுவது தன்னலமற்ற சேவையாகவும், சமூகப் பணிக்கு அர்ப்பணிப்புக்காக 24.7.2017 இரவு வரை உறக்கம் துறந்து, அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சிரமம் இல்லாமல் பாதுகாப்பாய் குண்டம் இறங்க வரிசைப்படுத்தி, பொதுமக்களிடையே பொறுமையாய் நடந்து கொண்டு சேவையாற்றினர். இதில் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும், இந்த ஆத்மார்த்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...