கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் தீ விபத்து


கோவை வெள்ளளூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் தொடந்து எரிந்து வருகின்றது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தீயணை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



கோவையை அடுத்த வெள்ளளூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகின்றது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பை கிடங்கின் ஓரு பகுதியில் இன்று மாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவி குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் முழுமையாக கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் வெள்ளளூர் பகுதியில் கடுமையாக புகைமூட்டம் நிலவியது.



இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்திக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.



இவர்களுக்கு உதவியாக வெள்ளூர் பகுதியில் உள்ள ஆர்.ஏ.எப் படை வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 தினங்களாகவே இந்த குப்பை கிடங்கில் தீ பிடிப்பதும் அதை தீயணைப்பு துறையினரும் மாநகராட்சி அலுவலர்கள் வந்து அணைப்பதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை மீண்டும் குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அருகில் உள்ள பொதுமக்கள் புகை மூட்டத்தால் அவதிக்குள்ளாகினர். மாநகராட்சி அலுவலர்களின்  அலட்சியத்தால் இது போன்று குப்பை கிடங்கில் தீப்பிடிப்பது வாடிக்கையாகிவிட்டதாக வெள்ளளூர் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...