ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” அனுசரிப்பு

கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒவ்வோர் வருடமும் ரமளான் பெருநாள் முடிந்த பின் மாநகரின் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் என பலதரப்பினரையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் நல்லிணக்கம் பேணும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியினை முஹம்மது முஸ்தபா துவக்கி வைத்தார். இந்த பெருநாள் சந்திப்பின் நோக்கம் மற்றும் ஜமாஅத்தின் பணிகள் குறித்து கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் ஜனாப். கே.ஏ.சையது இப்ராஹிம் உரையாற்றினார்.



தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே புரிதல்கள் மேம்படவேண்டும் என்றும், இத்தகைய சந்திப்புகள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் பக்தவத்சலம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விரைவு அதிரடிப்படை 105-வது படைப்பிரிவின் உதவி கமாண்டன்ட் சுந்தரக்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் அனந்த கிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அருட்தந்தை ஜான் பீட்டர், இயக்குனர், திவ்யோதயா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...