சொத்து வரியுடன் குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு

கோவையில் இனி சொத்து வரியுடன் குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான சேவை வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டண விவரங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சிகளில் செய்து வரும் பணிகள் நிலுவையில் உள்ள பணிகள், அதற்கான காரணங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மாநகராட்சியின் நிதியாதாரத்தை பெருக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் வருவாய், நடப்பாண்டு இலக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதில், கோவை மாநகராட்சியில் 4.89 லட்சம் வரி விதிப்புகள் உள்ளன. நடப்பாண்டு, 144 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 28 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இது 20 சதவிகிதம் வரி வசூலை முடுக்கி விடுவதோடு நிதி ஆதாரத்தை பெருக்க அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பை வரியாக மாதத்துக்கு 10 ரூபாய் வணிக நிறுவனங்களுக்கு 50 ரூபாய் பெரிய நிறுவனங்களுக்கு கூடுதலாக நிர்ணயிக்க முடிவாகி உள்ளது.

இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ரூ.1.8 கோடி வீதம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்தவும், இணைக்கப்பட்ட பகுதிகளில் அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் பாதாள சாக்கடை இணைப்புக்கும் சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என்றும் இதனை மாமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சியின் நிதியாதாரத்தை பெருக்க வரி வசூலை முடுக்கி விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வார்டு வாரியாக அனைத்து வரி விதிப்புகளும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும். சொத்து வரியுடன் குப்பை வரி சேர்த்து வசூலிக்கப்படும். இனிவரும் காலங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான சேவை கட்டணம் பெறப்படும். கட்டண விவரங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலமாக மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.30 கோடிக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...