நரசாம்பதி குளத்தை தூர் வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் வேடப்பட்டி கிராமத்தில் வீரகேரளம், தெலுங்கு பாளையத்துக்குட்பட்ட நரசாம்பதி குளத்தை இன்று தூர் வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில்,

தமிழக முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். குறிப்பாக வேளாண்மைத்துறையின் வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை துவக்கி வைத்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் குளம் குட்டைகள் சுத்தப்படுத்தி தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர் சேமிக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணியில் துவக்கி வைத்தார். மேலும் விவசாயிகளின் வரவேற்பை இந்த ஆண்டு  அறிந்து ரூ.200 கோடி ஒதுக்கி தமிழ்நாடு முழுவதும் குளம் குட்டைகளின் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதனடிப்படையில் இன்று வேடப்பட்டியில் நரசாம்பதி குளத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்குளத்துக்கு சித்திரை சாவடி வாய்க்கால் மூலம் நீர் வரத்து பெறப்படும். இக்குளத்தின் கொள்ளளவானது 9.50 மில்லியன் கன அடியாகும். இக்குளத்தில் வண்டல் மண் விவசாயிகள் இலவசமாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். விவசாயிகள் வண்டல் மண்ணை உபயோகிப்பதால் இயற்கையாக உரமாகவும் வண்டல் மண் திகழ்கிறது. குளங்களில் வண்டல் மண் எடுப்பதால் குளம் ஆழப்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்க ஏதுவாக உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி, பொதுபணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் செந்தில்வேலன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...