ஓ.பி.எஸ் அணியின் மீது எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விதிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை- முன்னாள் அமைச்சர் செ.தாமோதிரன் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தங்கள் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. தனது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அணி மாறியதாக கூறும் ஆறுக்குட்டி, இதற்காக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு செல்வாரா ?.

தமிழகத்தில் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த தலைமையில் இருந்து ஆறுக்குட்டி வெளியேறியது வேதனை அளிக்கிறது. வழக்கு உள்ள அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருவதால் மேலும் கட்சி உடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என சொல்ல முடியாது. அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால் பலமிழந்துவிடாது. இரு அணிகள் இணைய தற்போது வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...