வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மழையில் நனைந்து கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.


கோவை: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை புதன்கிழமை காலையிலும் தொடர்ந்ததால், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்குச் சென்றோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, பன்னிமேடு, சேக்கல்முடி, சோலையாறு அணை, மலுக்கப்பாறை, கருமலை, பச்சமலை, கவர்க்கல், தளனார், சக்தி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இதனால் காலை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.



மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மழையிலேயே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

மழை பதிவின்படி, சின்னக்கல்லாரில் 27 மி.மீ., சோலையாறு அணை பகுதியில் 24 மி.மீ., வால்பாறையில் 21 மி.மீ., சின்கோனாவில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, வால்பாறையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள சோலையாறு அணைக்கு 853.30 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. 165 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 83 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து 1,365 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வால்பாறை மலைப்பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...