'ஏ' சான்றிதழை கலாய்க்கும் 'தரமணி'

தரமான படங்களை இயக்கிவரும் ராம்-யின் அடுத்த திரைப்படம் தரமணி. கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராம்-ன் தங்க மீன்கள் படத்திற்கு பின்பு வேறு எந்த படமும் வெளியாகாததால், தரமணி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததாகவும், ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தரமணி போஸ்டர் இன்று இயக்குனர் ராம்-ன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த போஸ்டரில் படத்திற்கு அளிக்கப்பட்ட 'ஏ' சான்றிதழை கலாய்க்கும் விதமாக வாசகம் இடம்பெற்றுள்ளது. 

"தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் U/A. பெண் 'ரா'வாக மது அருந்தினால் A. ஆக தரமணி A" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

போஸ்டரில் இடம்பெற்ற இந்த வாசகத்தின் மூலம் பெண் மது அருந்தும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு தணிக்கைக்குழு இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...