சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியது மறக்க முடியாத அனுபவம் - பிரெட் லீ


சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியது மறக்க முடியாத அனுபவம் என ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில் அணிகளுக்கு ஆலோசகராகவும் வர்ணனையாளராகவும் பங்கேற்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான பிரெட் லீ தமிழகத்திற்கு வந்துள்ளார்.



இதன் ஒரு பகுதியாக கோவை பேன் பார்க் நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். டி.என்.பி.எல் கிரிகெட் போட்டிகள் தற்போது விளையாடும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு எனவும் இதில் சிறந்து விளங்குபவர்கள் ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிக்கு விளையாட ஒரு வாய்பாக இந்த போட்டிகள் அமையும் என தெரிவித்தார்.



மேலும், அதிவேகமாக பந்து வீசுவதால் மட்டுமே ஒருவர் தலை சிறந்த பவுலராக வெற்றி பெற முடியாது என்றவர் சரியான முறையில் பந்து வீசுவதும் முறையான பயிற்சி எடுத்து கொள்வதால் மட்டுமே சிறந்த பந்து வீச்சாளராக முடியும் என கூறினார்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஒரு ஓவரில் 1 பந்து மட்டுமே பவுன்சராக வீச அனுமதிக்கபட்டுள்ளது பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக உள்ளது என்றும் வேகமாக பந்து வீசுபவர்கள் வலைபயிற்சியில் அதிக நேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் நீண்ட காலம் காயங்களை தவிர்த்து விளையாட முடியும் என தெரிவித்தார்.



தென் ஆப்பிரிக்கா அணி வீரர் கெவின் பீட்டர்சன் 2019ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக கேட்ட கேள்விக்கு அவர் சிறந்த வீரர் எனவும் உலக கோப்பை போட்டிகளில் அவர் விளையாட தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தலை சிறந்த வீரர்கள் விளையாடிய காலத்தில் தானும் விளையாடியது பெருமையாக உள்ளதாகவும் இந்திய அணியில் தலை சிறந்த வீரர்களான சச்சின் தெண்டுல்கர், கங்குலி, சேவாக், லக்‌ஷ்மன் ஆகியோருக்கு பந்து வீசியது சவாலானதாக இருந்தது என தெரிவித்தார்.

உங்கள் அனுபவத்தில் மறக்க முடியாத கிரிக்கெட் வீரர் யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சச்சினுடன் விளையாடிய தருணங்களை மறக்க முடியாது என தெரிவித்தார். முதன் முதலாக சச்சினுக்கு பந்து வீச சென்ற போது, பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கலாமா என்று தாம் யோசித்திருப்பதாக பிரெட் லீ தெரிவித்தார்.



இந்தியாவுடன் விளையாட செல்லும் போது மற்ற வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் என்று கூறுவார்கள் எனவும் ஆனால் தாம் முழுவதும் கடவுளை மட்டுமே நம்பி இந்தியாவுடன் விளையாடுவேன் எனவும் லீ தெரிவித்தார். நான் கிரிக்கெட் வீரராக ஆகாமல் போயிருந்தால் இசைத்துறைக்கு சென்றிருப்பேன் என அவர் அப்போது நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் அப்போது குறிப்பிட்டார். தாம் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய தொடர் தோல்விகள் குறித்து விமர்சிப்பது சரியாக இருக்காது எனக்கூறிய அவர் இருப்பினும் இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி முழு திறனுடன் மீண்டு வரும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...