கோவை மாவட்டத்தில் 37.94 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது- ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் 37.94 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உத்தரவின்படி அனைத்து குடும்ப அட்டைகளிலும் ஆதார் எண் இணையதளம் வழியாக இணைக்கப்பட்டு மின்னனு குடும்ப அட்டை தயார் செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் நடப்பில் உள்ள 9,63,903 குடும்ப அட்டைகளில் 3,79418 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது 59,842 ஸ்மார்ட் கார்டுகள் வரப்பெற்று சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர் தங்கள் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை எவ்விதக் கட்டணமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு படிப்படியாக வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், புகைப்படமாற்றம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் அகியவற்றிற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களை அணுகி திருத்தம் செய்து கொள்ளலாம். அதற்கு சேவை கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்ட உடன் மேற்படி இ-சேவை மையத்திலேயே ரூ.30 செலுத்தி உடனடியாக திருத்தம் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்களில் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்திட்டம் குறித்து பயணாளிகள் தெரிவித்ததாவது:

எனது பெயர் செல்வமதி, நான் பேரூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் இப்போது மின்னனு குடும்ப அட்டை பயன்படுத்தி வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. பழைய ரேஷன் கார்டு பேப்பர் போல இருந்தது அதனால் கிழிந்து போவதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. தற்பொழுது புதிய வடிவில் கைக்கு அடக்கமாக இருப்பதால் அதை எளிதாக பயன்படுத்திட முடிகிறது.

ரேஷன் கார்டு தற்பொழுது ஸ்மார்ட் கார்டாக மாற்றித்தந்ததால் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்னய் போன்ற பொருட்களின் இருப்பு எவ்வளவு இருக்கு என்பதையும், நியாய விலைக்கடை வேலை நேரம் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்த மின்னனு குடும்ப அட்டை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. 

தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சரசம்மாள் தெரிவிக்கையில்,

எனது பெயர் சரசம்மாள் நான் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவள். எனக்கு பழைய குடும்ப அட்டைகளை புதிய அட்டையாக மாற்றித்தருவதாக ரேஷன் கடையில் சொல்லி புதிய அடையாள அட்டை வடிவிலான குடும்ப அட்டையினை அலுவலர்கள் கொடுத்தார்கள். முன்பு கொடுத்த குடும்ப அட்டை புத்தகம் போலவும் வெளியில் எடுத்துச்செல்ல பிரத்யேக பாதுகாப்புடனும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இந்த எளிய வடிவிலான அட்டையை தற்சமயம் கொடுத்துள்ளதால் நான் எல்லா இடங்களுக்கும் சுலபமாக பையில் வைத்து எடுத்துச் செல்கிறேன்.

மேலும், எனது மகனுக்கு திருமணம் முடிந்துள்ளதால் அவனுக்கு புதிய அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளேன். மிகவும் எளிய முறையில் விண்ணப்பித்து வந்துள்ளேன். அதுவும் அலுவலர்கள் நேரில் வந்து விசாரித்து 45 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கிவிடுவதாக உத்தரவளித்துள்ளார்கள்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...