துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டும் - வைகோ

துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென அதிமுக எடுக்கும் முடிவு அவர்களது உரிமை என தெரிவித்தார். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் கட்சியை சாராதவரும், காந்தி, ராஜாஜி பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தியை பாஜக அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிமுக எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமின்றி, முழு தகுதி படைத்தவர் என்ற முறையில் வாக்களிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள் என வைகோ தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...