பிக்பாஸ் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி என எச்.ராஜா தெரிவித்தார்.

கோவையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் தற்போது பரப்பன அக்ரஹாரம் வரை பாய்ந்திருக்கின்றது. கர்நாடக சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கின்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஊழலின் மூலமாக பெற்ற பணத்தை சிறைச் சாலையிலும் சொகுசு வாழ்க்கை வாழவும் பயன்படுத்துகின்றனர். இந்த மாதிரியான சக்திகளை தமி்ழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பினை பயன்படுத்தி சில இடங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்துள்ளது. சில இடங்களில் தெரியாமல் நடக்கும் இது போன்ற தவறுகளை 3 மாதத்திற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மூன்று மாதங்களுக்கு பின்னர் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சசிக்கலாவிற்கு என தனியாக சமையல் அறை அமைத்து இருப்பது பணத்திமிறை காட்டுகின்றது. இதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளை குற்றம் சுமத்துவது தவறானது. 

சிஸ்டம் சரியில்லை என தமிழக அரசை நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி. 

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சொல்வது தவறானது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களும் தமிழர்கள்தான். ஊடகங்கள் மத்திய அரசுக்கும் மோடிக்கும் எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். 50 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனர்". 

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...