தமிழ்நாட்டில் விளைநிலங்களை விட்டு வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சீமான் பேச்சு

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. இந்நிலையில், ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்கு திராணியற்ற அரசாக மாநில அரசு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடகோவை மேம்பால பூங்காவில் உள்ள பெருந்தமிழர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

அரசியல் வரலாற்றில் தூய தலைவராக இருந்தவர் காமராசர் அவர்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடம் திறந்தவர். ஆனால், இன்று தெருவிற்கு தெருவில் மதுக்கடை அதிக அளவில் திறக்கப்படுகிறது. அவர் இல்லையென்றால் இன்று கல்வியறிவு பெற்ற சமுதாயமாக இருந்திருக்க முடியாது. உண்மை, நேர்மை, எளிமை போன்றவற்றை அவரது பெரும் சொத்தாக வைத்து வாழ்ந்து வந்தார். இன்றைய பிள்ளைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வழித்தடம் காட்டித்தந்தவர். 

அவரது ஆட்சியை போலவே நடத்தவேண்டும் என்று சொல்பவர்கள் இன்று ஊழல் செய்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்று பேசுவதே அர்த்தமற்றது ஆகும். காமராசர் எந்த வழியில் பயணித்தாரோ அந்த வழியில் நாங்கள் பயணிக்க இந்நாளில் உறுதிமொழி ஏற்கின்றோம்' என்றார்.



மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்து சீமான் பேசுகையில், தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தியா நட்பு நாடு என்று கூறுகிறார்கள் ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களை இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தண்டிக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்வதில்லை. இதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. விளைநிலங்களை விட்டு இன்று வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்க்கு மாநில அரசிற்கு திராணியில்லை. எங்களிடம் அதிகாரம் இருந்திருந்தால் காவேரி வேளாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமைத்திருப்போம். 

மதுக்கடையை தடை செய்ய வழக்கு தொடர்ந்தால், அது அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என்கின்றனர். நீதியின் பக்கம் மக்களுக்கு அநீதி நடக்கிறது' என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...