கோவையில் வனத்துறையினரின் அதிரடி சோதனையில் விலங்குகளின் ரோமங்களிலால் தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல்



வன விலங்குகளின் ரோமங்களில் இருந்தோ அல்லது அவற்றின் உறுப்புகளை கொண்டோ எந்த பொருட்களையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கீரி மற்றும் நரி போன்ற வன விலங்குகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. 

இதை தொடர்ந்து, இன்று வன உயிரின குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.



வன உயிரின குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மதிவாணன் தலைமையில் 12 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து கோவையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது காந்திபுரம், டவுன்ஹால், சவுரிபாளையம் போன்ற பல்வேறு இடங்களில் வன உயிரினங்களின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தொடர்ந்து, சோதனை நடைபெறும் என்றும் இது தொடர்பாக நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...