ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி துப்புரவு, டெங்கு பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் என நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீப மாதங்களாக இவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதில்லை. இது சம்மந்தமாக பலகட்டங்களாக நேரிலும் கடிதம் மூலமும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவதும் எவ்வித நடவடிக்கை இல்லததால், இது சம்மந்தமாக ஒப்பந்ததாரர்களிடம் பேசம் பொழுது எங்களுக்கு உரிய காலத்தில் இருந்து எங்களுக்கு பில்லிற்கான தொகை கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர். 

எனவே, மேற்கண்ட பணியாளர்களுக்கு, முதன்மை வேலையளிப்பவர் என்ற முறையில் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு இன்று காலை அடையாள வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதியிடம் தங்கள் பிரச்சனையை கூறினார். இதற்கு முறையான நடவடிக்கை எடுத்து நாளைமறுநாளில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...