கோவையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்- மெத்தனம் காட்டும் அரசு நிர்வாகம் ?

கோவையில் கடந்த சில வாரங்களாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த மாதம் 8-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், இரண்டுக்கும் மேற்பட்டோர் உயிரும் இழந்தனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகம் அன்றாடம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளுக்குச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக அபேட் மருந்தினை தெளித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து அவ்வப்போது ஆய்வுப் பணி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும், மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 15 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் காரணமாக 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தற்போது பருவக்கால மாற்றத்தின் காரணமாக எய்டஸ் வகை கொசு லார்வாக்கள் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவிவருகின்றன. அங்கு சென்று வரும் மக்களிடம் இந்த நோய் தொற்று ஏற்பட்டு பிற மாநிலங்களுக்கு பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு அவசியம் மக்களே...!

மக்கள், தங்களது குடியிருப்புகளைச் சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் இல்லாதவாறு, கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். வீட்டில் தண்ணீர் தேக்கிவைத்துள்ள பொருட்களை முழுவதுமாக மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

வாரம் ஒருமுறையேனும் வீட்டினையும், குடியிருப்பு பகுதியினையும், கழிவுநீர் வாய்க்காளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

என்னதான், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பொது மக்களாகிய நமக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தெளிவான விழிப்புணர்வு அவசியமாகும்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...